நடிகை காஞ்சனா
பழம்பெரும் நடிகை காஞ்சனாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக இயக்குகிறார் டைரக்டர் ராஜ்மோகன்.
தனது கோடிக்கணக்கான சொத்துக்களை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தானமாக கொடுத்துவிட்டு ஏழையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் நடிகை காஞ்சனா.
தனது வாழ்க்கையை ஒரு விமான பணிப்பெண்ணாக ஆரம்பித்தவர், அதன்பின் நடிகையாகி பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
வாழ்வாங்கு வாழ்வதும் பின் அந்த வாழ்க்கையை அர்ப்பணிப்பதும் எளிதான விஷயமல்ல. இந்த விஷயத்தை மையமாக கொண்டு ஒரு நடிகையின் வாக்குமூலம் என்ற படத்தை இயக்கவிருக்கிறார் ராஜ்மோகன்.
இவர் ராஜ்கிரண் நடித்த பகடை படத்தை இயக்கியவர். மௌனம் பேசியதே, காதல் கிசுகிசு, குண்டக்க மண்டக்க போன்ற படங்களை தயாரித்த கேசவன் இப்படத்தை தயாரிக்கவுள்ளார்.
பாலுமகேந்திராவின் ஏணிப்படிகள் மாதிரி பார்ப்பவர்களின் இதயத்தை ஒரு நிமிஷம் உலுக்கிவிட்டு போகவிருக்கும் இந்த கதையில் யார் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று யோசித்த ராஜ்மோகன், சோனியா அகர்வாலிடம் கதையை சொன்னாராம்.
சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளுக்கு எந்த பிரிவில் பணியாற்றும் பெண்களாக இருந்தாலும் பாதிக்கப்படுகிறார்கள். அதுவே ஒரு நடிகையின் வாழ்விலும் நடக்கிறது.
அவள் என்னாகிறாள் என்பதுதான் இந்த கதையின் முடிச்சு. இதை கேட்டவுடன் உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டாராம் சோனியா அகர்வால்.
சொத்துக்களை இழந்து வீதிக்கு வந்தார்; பழைய நடிகை காஞ்சனா - கோவிலில் பிரசாதம் வாங்கி சாப்பிட்டு வாழ் நாளை கழிப்பு
BeantwoordenVerwijderenதமிழ் திரையுலகில் 1960 மற்றும் 70 களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் காஞ்சனா. தெலுங்கு,மலையாளம்கன்னட மொழிகளிலும் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினிகணேசன் போன்றோருடன் நடித்து இருக்கிறார்.
சிவாஜியுடன் சிவந்த மண்படத்தில் “பட்டத்து ராணி பார்க்கும் பார்வை” என அவர் பாடி ஆடியது ரசிகர்களை ஈர்த்தது. “சாந்தி நிலையம்”, “நான் ஏன் பிறந்தேன்”, “அதே கண்கள்”, “காதலிக்க நேரமில்லை” என 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
வசீகர அழகால் ரசிகர்களை உற்சாகப்படுத்திய காஞ்சனாவின் இன்னொரு புற வாழ்க்கை சோகம் நிறைந்தது. அவர் நடித்து சம்பாதித்த சொத்துக்களை உறவினர்கள் ஏமாற்றி பிடுங்கி விட்டனர். எல்லாவற்றையும் இழந்து வறுமைப் பிடியில் சிக்கினார்.
கர்நாடகாவில் ஒரு கோவிலில் பிரசாதம் வாங்கி சாப்பிட்டு வாழ் நாளை கழிப்பதாக பத்திரிகைகளில் செய்தி வந்தன. கோர்ட்டு மூலம் சமீபத்தில் சில சொத்துக்களை மீட்டு திருப்பதி கோவிலுக்கு எழுதி வைத்தார். விமான பணிப்பெண்ணாக இருந்து நடிகையாகி தற்போது ஏழ்மையில் கஷ்டப்படும் காஞ்சனாவின் வாழ்க்கை சினிமா படமாகிறது.
இப்படத்தை ராஜ்கிருஷ்ணா இயக்குகிறார். இவர் ராஜ்கிரண் நடித்த “பகடை” படத்தை டைரக்டு செய்தவர். “மௌனம் பேசியதே”, “காதல் கிசுகிசு”, “குண்டக்க மண்டக்க” படங்களை தயாரித்த கேசவன் இப்படத்தை தயாரிப்பார் என தெரிகிறது.
காஞ்சனா வேடத்தில் நடிக்க பிரபல நடிகைகளுடன் பேசி வருகின்றனர். சோனியா அகர்வாலிடமும் பேச்சு வார்த்தை நடக்கிறது.
19 Apr 2011